கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நாட்டா., (கட்டட கலை திறனறி தேர்வு)நுழைவுத்தேர்வு, ஜூலை, 11ம் தேதி நடத்தப்படும் என, கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் ( சி.ஓ.ஏ.,) அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த நுழைவுத்தேர்வு, முதல்கட்டம் ஏப்., மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூன் 12 நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 11ம் தேதி காலை, 10:00 முதல் 1:00 மணி வரை முதல் அமர்வும், 2:30 முதல் 5:30 மணி வரையும் நடத்தப்படவுள்ளது. இரண்டாம் அமர்வு அவசியம் எனில், மாணவர்கள் எண்ணிக்கை பொறுத்தே நடைபெறும். கடந்த ஏப்., மாதம் முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும், எழுத தவறியவர்களும் இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்க முடியும்.
கொரோனா பரவல் காரணமாக, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தெளிவாக, தாங்கள் தேர்வு எழுத வேண்டிய மையத்தை, முன்னுரிமை அடிப்படையில் கவனமாக தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.coa.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment