டெல்லியைச் சேர்ந்த மம்தா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆன்லைனிலோ, வழக்கமான முறையிலோ நடத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. வெளியிட்ட அறிவிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உயர்கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ளும் அதேசமயம், மாணவர்களின் உடல்நலத்தையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
கொரோனா பரவல் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு தீவிரமாக உள்ளது. எனவே கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறைக்கு பின்பற்றிய அதே முறையை நடப்பாண்டு பின்பற்றி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
MOST READ
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
அப்போது மனுதாரர் மம்தா சர்மா, ஐ.சி.எஸ்.இ. தரப்பிலான வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுநல மனுவின் நகலை சி.பி.எஸ்.இ. வக்கீலிடம் கொடுக்க மனுதாரருக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை 31-ந் தேதி காலை 11 மணிக்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment