கத்திரி வெயில் இன்று முடிகிறது:13 மாவட்டங்களில் 2 நாள் அனல் - EDUNTZ

Latest

Search here!

السبت، 29 مايو 2021

கத்திரி வெயில் இன்று முடிகிறது:13 மாவட்டங்களில் 2 நாள் அனல்

வரும் இரண்டு நாட்களுக்கு, 13 மாவட்டங்களில் இயல்பை விட, வெப்பநிலை அதிகரிக்கும்' என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இன்றும், நாளையும், 13 மாவட்டங்களில் இயல்பை விட, அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். அதாவது, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் பறக்கும்.நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை மற்றும் வேலுாரில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. 

MOST READ 

திருச்சி, 40; சென்னை, கடலுார், கரூர் பரமத்தி, துாத்துக்குடியில், 39; நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், புதுச்சேரி, 38; காரைக்கால், 37; தர்மபுரி, 36; கோவை, 35; கன்னியாகுமரி, 33; கொடைக்கானல், 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதுஇதற்கிடையில், அக்னி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில் காலம் இன்று முடிகிறது. இந்த மாதம், 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியது. அக்னி நட்சத்திர காலத்தில், பல மாவட்டங்களில், கோடை மழை கொட்டியது.

ليست هناك تعليقات:

إرسال تعليق