ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.யின் 134 படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 19 May 2021

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.யின் 134 படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

தேசியத் தலைநகர் தில்லி யில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 134 படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை திங் கள்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத் தில் 8 புதிய படிப்புகள் மற்றும் 4 புதிய துறை கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுகளை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நடத்தப் போவ தாக பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளது. 

இதற்காக மாணவர்கள் ஆன் லைன் விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பகுதிநேர நுழைவுத் தேர்வு, சான்றிதழ், டிப்ளமோ மற் றும் மொழிப் படிப்புகளில் மேம்பட்ட டிப் ளமோ படிப்புகள் தொடர்பான அறிவிப்பு கள் பின்னர் தனித் தனியாக வெளியிடப்ப டும். மேலே குறிப்பிடப்பட்ட தேதிகள் தற் போது நிலவும் கரோனா தொற்று நோய் கார ணமாக மாற்றத்துக்கு உள்பட்டவை என்று பல்கலைக்கழகம் அறிக்கையில் தெரிவித்துள் ளது. 

நுழைவுத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மாணவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும். வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புத் துறை, மருத்துவமனை மேலாண்மை மற்றும் நல்வாழ்வுத் துறை, வெளிநாட்டு மொழிகள் துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஆகிய 4 புதிய துறைகளை பல்கலைக்கழகம் தொடங்குகிறது. மேலும், 8 புதிய படிப்புக ளையும் இந்தப் பலக்லைக்கழகம் தொடங்க வுள்ளது. 

கட்டடக்கலையில் மாஸ்டர் ஆஃப் டிசைன், பி.ஏ. (ஹானர்ஸ்) பிரஞ்சு மற் றும் பிராங்கோபோன் ஆய்வுகள், பி.ஏ. (ஹானர்ஸ்ஸ்) ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வுகள், எம்எஸ்சிசுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மேலாண்மை, எம்ஏ மாஸ் மீடியா (ஹிந்தி) மற்றும் ஹிந்தி துறையில் ஆங்கிலம்-ஹிந்தி மொழிபெயர்ப்பில் முது கலை. டிப்ளமோ, ஆங்கிலம் மொழியியல் துறையில் மொழிபெயர்ப்பு ஆய்வில் முது கலை டிப்ளமோ மற்றும் எம்பிஏ ஹெல்த் கேர் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. 

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், கல்வித் துறையில் இளங்கலை, முதுகலை, பி.எச்.டி. மற்றும் எம்ஃபில் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பல அடுக்கு கல்வி முறையின் ஒரு அம்சமாக மாறியுள் ளது. இங்கு 9 கற்றல் துறைகள், 39 கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறைகள், 30-க்கும் மேற் பட்ட கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 190 படிப்புகள் உள்ளன. மேலும், சுமார் 800 ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண் டுள்ளது என்று துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு மேற்கண்ட செய்தியில் ஏதேனும் பிழை இருப்பின் இங்கே கிளிக் செய்து இணைப்பைப் பார்த்துப் படித்துக் கொள்ளவும்


No comments:

Post a Comment