கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு ரூ.1,500 பிழைப்பூதியம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் திருநங்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் தன்னார்வலர்கள் 'திருநங்கைளுக்கு உதவ வேண்டும்' என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
MUST READ
இதையடுத்து திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி உதவி அளிக்க தலா ரூ.1,500 பிழைப்பூதியமாக வழங்க முடிவு செய்துள்ளது. 'மத்திய அரசின் இந்த உதவி குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும்' என, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 'இந்தப் பிழைப்பூதியத்தை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
MUST READ
எங்கு விண்ணப்பிப்பது?
திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்ற இணைப்பில் உள்ள படிவதத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். SOURCE NEWS
No comments:
Post a Comment