தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 
விளம்பர எண் : 585 நாள் : 29.04.2021 

துறைத் தேர்வுகள் - மே 2021 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறி வகைக்கான கணினி வழித் தேர்வு, துறைத்தேர்வுகள் - மே 2021 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாகப் பதிய வேண்டும். 


துறைத் தேர்வுகள் - மே 2021, 22.06.2021 முதல் 30.06.2021 வரை (27.06.2021 ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 29.04.2021 முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.05.2021 அன்று 11.59 பிற்பகல் வரை. 


அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் / 60 சதவீதம் / 80 சதவீதம்) கணினி வழி முறையிலும் அனைத்து விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 20 சதவீதம் / 40 சதவீதம் / 60 சதவீதம்) ஏற்கெனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும். திருத்தப்பட்ட தேர்வு அமைப்பு முறை மற்றும் பாடத்திட்டம் (இணைப்பு-II) ஏற்கெனவே தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

துறைத்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் பாடத்திட்டம் தேர்வு அமைப்பு முறை தேர்வின் பெயர் / தேர்வு குறியீடு/ தேர்வுகளுக்கான கட்டணம் / அட்டவணை போன்றவை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in/ www.tnpscexams.net-ல் காணலாம். 

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் 

Post a Comment

Previous Post Next Post

Search here!