மாணவர்கள் நேரடியாக வந்து எழுதும் வகையில் பிளஸ்-2 தேர்வு கண்டிப்பாக நடக்கும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி - EDUNTZ

Latest

Search here!

Saturday 29 May 2021

மாணவர்கள் நேரடியாக வந்து எழுதும் வகையில் பிளஸ்-2 தேர்வு கண்டிப்பாக நடக்கும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி



பிளஸ்-2 தேர்வு கண்டிப்பாக நடக்கும். தேர்வு ஆன்-லைன் வழியாக அல்லாமல் மாணவர்கள் நேரடியாக வந்து எழுதும் வகையில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

MOST READ 
பேட்டி
பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் திருச்சி சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு ேபட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு நடக்கும்
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு கண்டிப்பாக நடக்கும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று உரிய முடிவு எடுக்க முடியும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ?. அதேபோல அவர்களுடைய உடல் நலமும் முக்கியம். மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்றுதான் எல்லோரும் கூறியிருக்கிறார்கள். தேர்வு தேதியை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். பிளஸ்-2 தேர்வு நிச்சயமாக ஆன்-லைனில் நடைபெறாது. மாணவர்கள் நேரடியாக வந்து தேர்வு எழுதும் வகையில் தான் இருக்கும்.

MOST READ 
பாலியல் புகார்
ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பாலியல் புகார் தொடர்பாக தமிழக கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சினை காவல்துறைக்கு சென்றுள்ளது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். தவறிழைத்தவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக விடமாட்டார்.
மன உளைச்சல்
ஆன்-லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆன்-லைன் வகுப்புகளுக்கு கிராமங்களில் இணையதள இணைப்பு வசதி 70 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அதுபோன்ற இடங்களில் வாட்ஸ்-அப் மூலம் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இணைய தள இணைப்பு பிரச்சினையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment