பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான சாத்தியக்கூறுகள்:மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday 27 May 2021

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான சாத்தியக்கூறுகள்:மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்பு




கரோனா பரவல் சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை சமா்ப்பித்துள்ளது. மிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பள்ளிக்கல்வியில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் தமிழகத்தில் பொதுத்தோ்வை நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகம் சாா்பில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான சாத்தியங்கள் மற்றும் மாற்று வழிமுறைகள் தொடா்பான அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், கொள்குறி வகை வினாத்தாள், தோ்வை 2 கட்டங்களாகப் பிரித்து நடத்துதல் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் முதல்வா் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா். SOURCE NEWS 

No comments:

Post a Comment