கி.ரா.வின் நினைவுத் தொகுப்பு
கட்டுரைகள்: ஜூன் 30-க்குள் அனுப்பலாம்
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவுத்
தொகுப்புக்கான கட்டுரைகளை, ஜூன் 30-ஆம்
தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்
ளது.
இது தொடர்பாக வழக்குரைஞரும், 'கதை
சொல்லி
இதழின் இணை ஆசிரியருமான கே.எஸ்.
இராதாகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தமிழ் எழுத்துலகின் பிதாமகர்,கரிசல் இலக்கியத்
தின் தந்தை கி.ராஜநாரயணன் என்ற கி.ரா.வின் படைப்பாளுமை, படைப்
புலகு, படைப்பு மொழி குறித்த ஆழமான செறிவான கட்டுரைகள், படைப்
பாளர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், ஆய்வாளர்
கள் ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு கிடைக்கப்பெறும் கட்டுரைகள், ஆசிரியர் குழுவால் தெரிவு
செய்யப்பட்டு கி.ரா.வின் நினைவுத் தொகுப்பாக வெளியிடப்படும்.
கட்டுரை, அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையை, கட்டுரையாளர்
தனது செல்லிடப்பேசி, முகவரி உள்ளிட்ட தகவல்களுடன், rkkurunji@gmail.com, drsulochanaiits@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு, ஜூன்
30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கி.ரா.வின் நினைவுத் தொகுப்புக் கட்டுரைகளை ஒருங்கமைவு செய்யும்
பணியை மாரீஸ், பேரா.முனைவர் நா.சுலோசனா முன்னெடுத்திருக்கிறார்
கள்.
No comments:
Post a Comment