நெல்லையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக நாளை மறுநாள் (அதாவது நாளை) சென்னையில் மிக சிறந்த மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
அப்போது கருப்பு பூஞ்சையை முற்றிலும் தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து மத்திய அரசிடம் இருந்து 600 குப்பிகள் பெறப்பட்டுள்ளது, கூடுதலாக மருந்தும் கேட்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதலாக டாக்டர்கள் 2,100 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர 6 ஆயிரம் செவிலியர்களும், 3,700 தொழில்நுட்ப பணியாளர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment