பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்க ஏஐசிடிஇ அனுமதி - EDUNTZ

Latest

Search here!

Thursday 27 May 2021

பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்க ஏஐசிடிஇ அனுமதி

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 


இதனால் கிராமப்புற மாணவர்களிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் குறைந்து வந்தது. இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) வரும் கல்வியாண்டு (ஜூன்) முதல் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலங்கு, கன்னடம், குஜராத்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பொறியியல் பாடங்கள் தமிழகத்தில் இனி தாய் மொழியான தமிழிலும் நடத்தப்படும் என்பதால் மாணவர்களிடையே பொறியியல் பாடங்களுக்கான ஆர்வம் அதிகரிக்கும் என எதிபார்க்கப்படுகிறது. 


மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே பாடங்களை கற்பதன் மூலம் பொறியியலின் அடிப்படை அம்சங்கள் குறித்து எளிதாக புரிந்துகொள்ள முடியும். தற்போது 7 மொழிகளில் பாடங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து இது மேலும் 11 மொழிகளில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஏஐடிசிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடங்களை மொழியாக்கம் செய்வதற்காக மென்பொருள் ஒரு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment