டெல்லி சார்நிலை சேவைகள் தேர்வு வாரியத்தில் 7,236 காலி பணியிடங்கள் | கடைசி தேதி: 24-6-2021. - EDUNTZ

Latest

Search here!

السبت، 22 مايو 2021

டெல்லி சார்நிலை சேவைகள் தேர்வு வாரியத்தில் 7,236 காலி பணியிடங்கள் | கடைசி தேதி: 24-6-2021.


டெல்லி சார்நிலை சேவைகள் தேர்வு வாரியம் (டி.எஸ்.எஸ்.எஸ்.பி) சார்பில் ஆசிரியர் மற்றும் கற்றல் அல்லாத பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. டெல்லி அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிவதற்கு 

MUST READ 

ஆசிரியர்கள், 
உதவி ஆசிரியர்கள், 
இளநிலை செயலக உதவியாளர், 
ஆலோசகர், 
தலைமை எழுத்தர், 
பட்வாரி உள்பட பல்வேறு பிரிவுகளில் 7,236 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

பட்டப்படிப்பு, பி.எட். முடித்தவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சில பதவி களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

MUST READ 

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் பதவிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களும், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு 27 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான விரிவான நடைமுறைகளை dsssb.delhi.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-6-2021.

ليست هناك تعليقات:

إرسال تعليق