வெளிநாடுகளில் படித்த 80 மருத்துவ மாணவர்களுக்கு சென்னை ஆஸ்பத்திரிகளில் பணி ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 27 May 2021

வெளிநாடுகளில் படித்த 80 மருத்துவ மாணவர்களுக்கு சென்னை ஆஸ்பத்திரிகளில் பணி ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு



வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களது மாநிலத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு டாக்டராக பணியாற்ற முடியும். அந்த வகையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட விகிதத்தில் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். 

தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக வாய்ப்பு நடப்பு ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 80 மாணவர்களுக்கு கடலூர், காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. 

தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் தான் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்களது பணியிடங்கள் சென்னை அரசு மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தில் தடையில்லாச் சான்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment