கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் - 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் - 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. சென்னையில் 14 பள்ளிகள் உட்படதமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன. 


வரும் கல்வி ஆண்டில் 1-ம்வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இணையதளத்தில் (kvsonlineadmission.kvs.gov.in) கடந்த ஏப்ரல் 1-ம்தேதி தொடங்கியது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கே.வி. இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சேர்க்கை பட்டியல்,காத்திருப்பு பட்டியல் விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு முன்னுரிமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment