ஆவாரம் : முக அழகுக்கு ஆதாரம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 23 May 2021

ஆவாரம் : முக அழகுக்கு ஆதாரம்

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" ஆ எனும் பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அத்தனை நன்மைகளைத் தரக்கூடியது ஆவாரம் பூ. ஆவாரை, துவர்ப்பு மற்றும் குளிர்ச்சியான தன்மை யுடையது. 

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி விடும். சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும். உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம். ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சைப் பயறோடு சேர்த்து அரைத்து, குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால், தோலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். 

கருந் திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக் கம் போன்றவை நீங்கும். ஆவாரம்பூவை நிழலில் காய வைத்து, டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத் திக்கொள்ளலாம். பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சினை இருப்பவர்களுக்கு, அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும். 

ஆவாரம் பூவின் பொடியைப் பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால், உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் செடி விதையைக் காய வைத்துப் பொடி யாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு, கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வந்தால், கண் எரிச்சல் மற்றும் சிவந்த நிறம் நீங்கும். முக அழகுக்கு மட்டுமின்றி, ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்து வக்குணங்களை கொண்டது. உடலில் அதிகமாகும் சூட்டைக் குளிர்ச்சிப்படுத்த உதவும். சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்கு மருந்தாக இருப் பது ஆவாரை தான். நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது ஆவாரம் பூ. 

நீரிழிவால் உண்டாகக் கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகளை யும் கட்டுப்படுத்துகிறது. இதன் இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி தயாரிக்கப்படும் நீர், நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு அதனால் உண்டாகும் பிற நோய்களையும் குணப்படுத்துகிறது. உடல் சூட்டைக் குறைக்கக்கூடிய ஆவாரை, கூந்த லுக்கும் வலுகொடுக்கும். 

குழந்தைகளுக்கு வியர்க் குரு, கோடையில் உடல் எரிச்சலாகாமால் இருக்க ஆவாரை இலையை அரைத்து உடலில் பூசி குளிக்க வைக்கலாம். ஆவாரம்பூவைக் குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம். பாசிப் பருப்புடன் வேகவைத்து நெய் கலந்தும் குழந்தை களுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். தேநீர் மட்டுமின்றி ரசம். குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி பொடியாக்கி யும் பயன்படுத்தலாம். இவ்வாறு பல்வேறு வகை களில் ஆவாரம் பூ பயனளிக்கிறது. 


No comments:

Post a Comment