அரசு பள்ளி மாணவிகள் - சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு : சமூக வலைதளங்களில் வைரல் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 1 May 2021

அரசு பள்ளி மாணவிகள் - சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு : சமூக வலைதளங்களில் வைரல்

திருப்பத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேவிகா(7), சிவானி(7) ஆகியோர் தமிழ் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை காணொலி காட்சியாக வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் வரும் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலை மாற்றி ‘கரோனா வந்தா சொல்லுங்க, நாங்க டாக்டரை வரச்சொல்லுறோம்’ என மாற்றி கரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடலாக மாற்றி பாடியுள்ளனர். 


அதேபோல, கமல் படத்தில் வரும் ஒரு பாடல், அஜீத் படப்பாடல், சூர்யா படப்பாடல் என பல பாடல்களின் வரிகளை மாற்றி அதை கரோனா தொற்றுடன் ஒப்பிட்டு கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாப்பது குறித்தும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சினிமா படப்பாடல்கள் மூலம் பாடியுள்ளனர். மேலும், கரோனாவை விரட்ட தனி மனித சமூக இடைவெளி அவசியம், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 

வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியமான ஒன்று, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை, கரோனாவை விரட்ட தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம் என அடுத்தடுத்து பாடல்கள் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப்பள்ளி மாணவிகளின் சமூக பொறுப்பும், பெருகி வரும் கரோனாவை கட்டுப்படுத்த விழிப் புணர்வு பாடல்கள் மூலம் 3-ம் வகுப்பு மாணவிகளை பாடச்செய்த ராஜாவூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திராவுக்கு அப்பகுதி மக்களும், சமூக வலைதளம் மூலம் நெட்டிசன் களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment