தெரிந்து கொள்வோம் : பெரிய கட்டிடங்களை இடிக்க பயன்படும் தொழில்நுட்பம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

தெரிந்து கொள்வோம் : பெரிய கட்டிடங்களை இடிக்க பயன்படும் தொழில்நுட்பம்

பெரிய கட்டிடங்களை இடிக்க பயன்படும் தொழில்நுட்பம் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்டிடங்களை தகர்ப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கும் வேலையாக இருந்தது. 

இன்றோ சில நிமிடங்களில் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. இந்தியாவில் வெடி வைத்து கட்டிடங்களை தகர்க்கும் தொழில் நுட்பத்துக்கு சுலபத்தில் அனுமதி வழங்குவதில்லை. இதில் ஆபத்து அதிகம். வெடி வைக்கும் தொழில்நுட்பத்தில் சிறிது சிக்கல் ஏற்பட்டாலும் அருகில் உள்ள வீடுகள் அல்லது கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுவிடும். கட்டிட இடிபாடு குவியல்கள் அக்கம்பக்கத்தில் சிதறி, பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். 


 எனவே பெரும்பாலும் வெடி வைத்து கட்டிடங்களை தகர்க்க அனுமதி பெறுவது என்பது பெரிய வேலை. கட்டிடங்களை இடிக்கும் பல நிறுவனங்கள் இன்று ‘இம்போல்சன்’ தொழில்நுட்பம் எனப்படும் உள்வெடிப்பு வசதியை செய்துகொடுக்கின்றன. உலகில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இந்த முறையில்தான் இடிக்கப்படுகின்றன. இது உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்ற தொழில்நுட்பமாகவும் உள்ளது. கட்டுமானத்தில் எங்கே வெடிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்து, அந்த இடத்தில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பி ரிலே மூலம் வெடிமருந்துகள் இணைக்கப்படும். 


கட்டிடம் முழுவதும் ஒரே சமயத்தில் அதிர்வை ரிமோட் மூலம் ஏற்படுத்தி உள்வெடிப்பை ஏற்படுத்துவார்கள். இந்த முறையில் மொத்த கட்டுமானமும் அந்தக் கட்டிடம் அமைந்த பகுதிக்குள்ளாகவே சரிந்து இடிபாடுகளாக குவியும். அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. 1990-களில் தொடங்கியது, இந்த தொழில்நுட்பம். இன்று உலகெங்கும் பிரமாண்ட கட்டிடங்களை இடிக்க இதனை பயன்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment