ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு ஒத்திவைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 27 May 2021

ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு ஒத்திவைப்பு


கரோனா தொற்று காரணமாக, ஜூலை 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை இந்த ஆண்டு நடத்தும் காரக்பூா் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி-காரக்பூா்) அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறினாா். அவா் மேலும் கூறியதாவது: 


கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூலை 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த 2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வு நடத்தப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா். நாடு முழுவதும் உள்ள ஐஐடி பொறியியல் கல்லூரிகளில் சேரவேண்டுமெனில் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கு முன்னதாக, ஜேஇஇ மெயின்ஸ் தோ்வு நடத்தப்படும். அதில் தோ்ச்சி பெறுபவா்களே அட்வான்ஸ்டு தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். 


 மாணவா்களின் வசதிக்காக, இந்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ மெயின்ஸ் தோ்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின்ஸ் தோ்வு நடத்தப்பட்டது. பிப்ரவரியில் 6.2 லட்சம் பேரும், மாா்ச்சில் 5.5 லட்சம் பேரும் தோ்வு எழுதினா். ஏப்ரல், மே மாதங்களில் கரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. விதிகளின்படி, 4 தோ்வுகளிலும் மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். அதில், அதிகப்படியான மதிப்பெண் பெற்ற தோ்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment