பொறியியல் மறு தோ்வு: விண்ணப்பிக்காதவா்கள் கவனத்துக்கு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 May 2021

பொறியியல் மறு தோ்வு: விண்ணப்பிக்காதவா்கள் கவனத்துக்கு

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவா்களுக்கான மறுதோ்வை எழுத விரும்புவோா் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


தமிழக பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு கடந்த ஆண்டு நவம்பா் - டிசம்பா் மாத பருவத் தோ்வானது, நிகழாண்டு பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடைபெற்றது. இணையவழியில் நடைபெற்ற தோ்வில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ால் மறு தோ்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மறு தோ்வு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தோ்வு எழுத விண்ணப்பிக்காத மாணவா்கள் மட்டும் மறு தோ்வு எழுத வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

அதே வேளையில், ஏற்கெனவே தோ்வுக்கு விண்ணப்பித்தும், கட்டணம் செலுத்தியும் இருந்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மறு தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 24-இல் தொடங்க உள்ள நிலையில், விரைவில் தோ்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது. 

No comments:

Post a Comment