பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 26 مايو 2021

பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை 

மே மாத சம்பளம் வழங்கும்படி, பகுதி நேர ஆசிரியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங் கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு: எங்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என்றோ, ஆண்டுக்கு, 11 மாதம் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும் என்றோ, எந்த அர சாணையும் இல்லை. 


எனினும், அ.தி.மு.க., ஆட்சியில், 2012 முதல், 2020 வரை, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், “பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்று கூறியது, நம்பிக்கை கொடுத்துள்ளது. “உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்' நிகழ்ச்சி யில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி, மனு கொடுத்துள்ளனர். 


100 நாளில், எங்கள் கோரிக்கை நிறைவேறும் என, எதிர் பார்க்கிறோம். கொரோனா ஊரடங்கு காலத்தில், வாழ்வா தாரம் இழந்து தவிக்கும், பகுதி நேர ஆசிரியர் களுக்கு, இந்த ஆண்டு மே மாதம் சம்பளம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. SOURCE NEWS

ليست هناك تعليقات:

إرسال تعليق