பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு - சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கிய தலைமை ஆசிரியை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 May 2021

பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு - சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கிய தலைமை ஆசிரியை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் கவரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழை-எளிய மாணவர்கள் 247 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே அவர்களுக்கு உதவும் வகையில், இப்பள்ளியின் தலைமையாசிரியை திரிபுரசுந்தரி தன் சொந்தசெலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பில், ஒவ்வொரு மாணவரின் பெற்றோருக்கும் தலா 4 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், உப்பு ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கினார். 

சமூக இடைவெளியுடன் நடந்த இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, மாணவர்களின் பெற்றோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களை மனம் நெகிழ வைத்த இந்நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் முனிராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் பூவராஜா, ஊராட்சி தலைவர் திருமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment