உலக சிரிப்பு தினம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

உலக சிரிப்பு தினம்

உலக சிரிப்பு தினம் 


மகிழ்ச்சியின் வெளிப்பாடே சிரிப்பு. வாய் மன ஆளா விட்டு சிரிப்பதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதயத்தசைகள் வலுவடை கின்றன. ஆயுள் அதிகரிக்கிறது. குழந்தைப் பருவத்தில் ஒரு நாளைக்கு நூறு முறைகளுக்கு மேல் சிரித்த நாம், பெரியவர் களானதும் சில முறை சிரிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் இயந்திர கதியில் ஓடுகின்றோம். 
அதன் விளைவாக மகிழ்ச்சியின்மை, அழுத்தம் போன்ற துன்பங்களுக்கு கின்றோம். இவை அனைத்தையும் குணமாக்கும் மந்திர மான சிரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஏற்படுத்தப்பட்டதே, 'உலக சிரிப்பு தினம்”. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கொண்டாடப்படு கிறது. நகரங்களில் சிலர் பெரிய குழுக்களாக ஒன்றுகூடி சிரித்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துகின்றனர். சிரிப்பு, உறவுகளுக்கிடையில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகும். 
நகைச் சுவையும், சிரிப்பும் மகிழ்ச்சியான, ஆரோக்கிய மான குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாகும். குடும்பத்துடன் சிரித்து மகிழ்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே வீட்டு வேலைகள், அலுவலக பணிச் சுமைகள் என்று பரபரப்பாக இருந்தாலும், குடும்பத்தோடு சிரிப்பதை அன்றாட வழக்க மாக்கிக் கொள்ளவேண்டும். குழந்தைகளின் இயல்பான நகைச்சுவை உணர்வை ஊக்குவிக்க வேண்டும். 'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' எனும் பொன்மொழிக்கேற்ப சிரித்து ஆரோக்கியமாக வாழ்வோம்

No comments:

Post a Comment