மூன்றாம் பாலினத்தினருக்கு மறுவாழ்வு வழங்க பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு: இல்லத்தில் பல்வேறு பிரிவில் பணி - EDUNTZ

Latest

Search here!

Wednesday 26 May 2021

மூன்றாம் பாலினத்தினருக்கு மறுவாழ்வு வழங்க பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு: இல்லத்தில் பல்வேறு பிரிவில் பணி


சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பாக மூன்றாம் பாலினத்தவர் (திருநர்/ திருநங்கையர் மற்றும் திருநம்பியர்) பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 8(4)ன்படி மூன்றாம் பாலினத்தவர்களை சமூக புறக்கணிப்பிலிருந்து மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் கரிமா க்ரஹ் என்ற மூன்றாம் பாலினத்தினருக்கான பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லம் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த இல்லம் Transgender Rights Association என்ற அரசு சாரா அமைப்பின் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இல்லத்தில் திட்ட மேலாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு மாத ஊதியம் 20,000 வழங்கப்படும். இதற்கு முதுகலை சமூகப்பணி பட்டப்படிப்புடன் 5 வருடம் அனுபவம் அல்லது குறைந்த பட்சம் 2 வருடங்கள் இல்ல பராமரிப்பில் அனுபவமுள்ள திருநங்கை அல்லது திருநம்பிகள் தகுதியுடையவர்கள். கணக்காளுமை உதவியாளர் பணியாளருக்கு மாத ஊதியம் 15,000 வழங்கப்படும். 

இதற்கு இளங்கலை வணிகவியலுடன் குறைந்த பட்சம் 3 வருட அலுவலக கணக்கர் அனுபவம் இருக்க வேண்டும். இணை கல்வி ஒருங்கிணைப்பாளருக்கு மாத ஊதியம் 15,000 வழங்கப்படும். இதற்கு இளங்கலை சமூக அறிவியல் பட்டப்படிப்புடன் குறைந்த பட்சம் 2 வருட அனுபவம் வேண்டும். அல்லது திறன் வளர்ப்பில் 1 வருட அனுபவம் உள்ள திருநங்கை அல்லது திருநம்பி தகுதியுடையவர் ஆவார். ஆற்றுப்படுத்துனருக்கு (பகுதி நேரம்) மாத ஊதியம் 15,000 வழங்கப்படும். 

இதற்கு முதுகலை சமூக அறிவியல் பட்டப்படிப்புடன் ஆற்றுப்படுத்தலில் 3 வருட அனுபவம் அல்லது ஆற்றுப்படுத்தலில் குறைந்தது 1 வருட அனுபவமுள்ள திருநங்கை அல்லது திருநம்பி தகுதியுடையவர். மருத்துவருக்கு (பகுதி நேரம்) மாத ஊதியம் 15,000 வழங்கப்படும். இதற்கு எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இல்லத்திற்கு வருகை புரிய விருப்பம் இருத்தல் வேண்டும். சமையலருக்கு மாத ஊதியம் 12,000 வழங்கப்படும். இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட சமையல் அனுபவம் மற்றும் சமையலறை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பன்முகப்பணியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ₹10,000 வழங்கப்படும். இதற்கு இளங்கலை படிப்புடன் ஒரு வருடம் அலுவலகப் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

சுத்தம் செய்பவருக்கு மாத ஊதியம் 8,000 வழங்கப்படும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஒரு வருடம் அலுவலகப் பணி அனுபவம் வேண்டும். காவல் பணியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ₹10,000 வழங்கப்படும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் காவல் பணியாளராக மூன்று பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மற்ற பிரிவுகளில் தலா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தகுதி உடையவர்கள் தங்கள் சுய குறிப்பு மற்றும் உரிய சான்றிதழ்களுடன் தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக கரிமா க்ரஹ், சி - 122/69, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை என்ற முகவரியிலும், garimagrehtra@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31.5.2021 ஆகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment