வாரியங்களில் சேர்க்கை
அதிகாரிகளுக்கு உத்தரவு
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்
டதும், தொழிலாளர் நல வாரியங்களில், பதிவு
செய்யாத அனைத்து அமைப்புசாரா தொழிலா
ளர்களையும், விடுதலின்றி பதிவு செய்யும்படி,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், தொழிலாளர் நல வாரியங்களில்,
இம்மாதம், 22ம் தேதி வரை, 28.24 லட்சம் தொழி
லாளர்கள் பதிவு, புதுப்பித்தல் மற்றும் ஆதார்
எண் இணைத்து உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு,
கண் கண்ணாடி, விபத்து ஊனம், இயற்கை,
விபத்து மரணம், ஈமச்சடங்கு மற்றும் ஓய்வூதிய
நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும்,
நிலுவையில் உள்ள அனைத்து பதிவு மற்றும்
புதுப்பித்தல் விண்ணப்பங்களை உடனுக்குடன்
பரிசீலித்து, தொழிலாளர்களுக்கு தொய்வின்றி
நிவாரண உதவிகள் கிடைக்கும் வகையில், துரி
தமாக
செயல்பட வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட
தும், வாரியங்களில் பதிவு செய்யாத, அனைத்து
அமைப்புசாரா தொழிலாளர்களையும், விடுத
லின்றிபதிவு செய்ய, சிறப்பு நடவடிக்கை எடுக்கும்
படி, துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கணேசன்
உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது SOURCE NEWS
No comments:
Post a Comment