டாக்டர்கள், செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search here!

السبت، 15 مايو 2021

டாக்டர்கள், செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. 

அதை ஈடுகட்டும் விதமாக அரசு வழிகாட்டுதலின்படி, தற்காலிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 35 வயதிற்கு மிகாமல் உள்ள எம்.பி.பி.எஸ்., பட்டய மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள், தகுதி வாய்ந்த செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற விரும்புவோர் கிருஷ்ணகிரி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்வி சான்றுகளுடன் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அன்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

முன்னுரிமை வழங்கப்படும் 

மருத்துவர்களுக்கு 12 பணியிடங்களும், செவிலியர்களுக்கு 20 பணியிடங்களும் உள்ளன. கொரோனா 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு 99654 08870 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق