மே மாதத்தில் நடக்க இருந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வும் ஒத்திவைப்பு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு 


நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு நடப்பாண்டில் இருந்து 4 முறை நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து கொண்டே வருவதால், கடந்த ஏப்ரல் மாதம் 27, 28 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 

 அதன் தொடர்ச்சியாக தற்போது மே மாதத்தில் 24, 25, 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வும் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது. ஏப்ரல், மே மாதத்தில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். அதேபோல், மே மாதம் நடைபெற இருந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பும் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வர்கள் www.nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மேலும் தகவல்களுக்கு 011-40759000 மற்றும் jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!