தினம் ஒரு தகவல் ‘நானோ’ தொழில்நுட்பம் வந்தது எப்படி? - EDUNTZ

Latest

Search here!

Sunday 16 May 2021

தினம் ஒரு தகவல் ‘நானோ’ தொழில்நுட்பம் வந்தது எப்படி?

தினம் ஒரு தகவல் ‘நானோ’ தொழில்நுட்பம் வந்தது எப்படி? 


மிகச்சிறிய அணு மிகப்பெரிய அளவிலான செயல்களை செய்ய வல்லது. அதை விட மிகவும் சிறியது நானோ. நானோவின் அளவைப்பற்றி நாம் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 அணுக்கள் அமர முடியும். 


இது நாம் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு. உதாரணத்திற்கு ஒரு மெல்லிய பேப்பரின் தடிமன் ஒரு லட்சம் நானோ மீட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது பற்றி 1959-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி அறிஞர் ரிச்சர்ட் வெயின்மன் ஒரு தகவலை வெளியிட்டார். அது தான் நானோ தொழில் நுட்பத்திற்கான தொடக்கம். 

அவரது கூற்றுப்படி இயற்பியலில், பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும், புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போகலாம் என்றும் கூறினார். நானோ தொழில்நுட்பம் என்ற சொல்லை டோக்யோ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் நோரியோ தனிக்குச்சி 1974-ல் அறிமுகப்படுத்தினார். 1980-ல் இந்த கருத்து டாக்டர் எரிக் டிரெக்ச்ளர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. 


இவரே நானோ தொழில்நுட்பத்தை பேச்சுகள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அப்போது முதல் நானோ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய தொடங்கியது. இயற்பியல் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இன்று நானோ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இயற்பியலில் தொடங்கிய நானோவின் பயணம், உயிரியல், வேதியியல், மின்னியல், பொறியியல் என்று அறிவியல் பிரிவுகளை கடந்து தற்போது மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பயன்பாட்டை அமெரிக்காவின் ‘நேஷனல் நானோ டெக்னாலஜி இனிஷியேட்டிவ்' என்ற நிறுவனம் உலகிற்கு அறிவிக்கும் பணியை செய்து வருகிறது. இப்போதைய சூழலில் நுண்நோக்கி கருவிகள், விண்வெளி ஆராய்ச்சி, கணினி பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் முழு வீச்சில் நானோ தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது. மிகவும் லேசான பாலிமர் இழையை பயன்படுத்தி ஒரு பாத்திரம் செய்து, அதை நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செறிவூட்டினால், நம்மூர் எவர்சில்வர் பாத்திரம் அளவிற்கு அது உறுதிமிக்கதாக மாறிவிடும். ஆனால், எடை குறைவாக இருக்கும். இதுதான் நானோவின் சாதனை.

No comments:

Post a Comment