மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும். சிபிஎஸ்இ - EDUNTZ

Latest

Search here!

السبت، 29 مايو 2021

மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும். சிபிஎஸ்இ


மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும். அதை மீறினால் பள்ளி களின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என சிபிஎஸ்இ எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) செய லர் அனுராக் திரிபாதி, அனைத்து INDIA பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை விவரம்: அரசின் விதிகளை சரிவர பின்பற்றாமல் சில பள்ளிகள் செயல்பட்டுவருவது தெரியவந்துள் ளது. 

அதன்படி சிபிஎஸ்இ வாரிய விதிகளை மட்டுமின்றி, மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் பள்ளிகள் முறையாக பின் பற்ற வேண்டும். அதை மீறினால் பள்ளிகளின் இணைப்பு அந் தஸ்துரத்து செய்யப்படும். மேலும், பள்ளிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் தங்கள் இணையதளப் பக்கத்தில் அங்கீகார விவரம், குறியீட்டு எண் உட்பட பல்வேறு அடிப்படை தகவல்களை பெற்றோர்கள் பார்க்கும் விதமாக முகப்பிலேயே இடம்பெற செய்ய வேண்டும். 

மேலும், அரசு தரப்பில் பெறப்பட்ட கட்டட, சுகாதார, தீய ணைப்பு சான்றிதழ்களின் நகல்கள், கல்விக்கட்டண விவரம், 3 ஆண்டுகளின் தேர்வு முடிவுகள் ஆகிய விவரங்களையும் கட்டா யம் குறிப்பிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق