கோயில்களில் காலி பணியிடம் எவ்வளவு? அறிக்கை அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 21 مايو 2021

கோயில்களில் காலி பணியிடம் எவ்வளவு? அறிக்கை அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு

கோயில்களில் காலிபணியிடம் எவ்வளவு?அறிக்கை அனுப்ப கோயில்அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு 

அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் 38,652 கோயில்கள் உள்ளது. இக் கோயில்களில் கூடுதல் ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலு வலர், இளநிலை உதவியாளர், மேலாளர், தலைமை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர் உட்பட 2409 அங்கீரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்கள் தவிர நிர்வாக வசதிக் காக அந்தெந்த கோயில்கள் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங் கள் பெரும்பாலானவை 10 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளதால், கோயில் களுக்கு சொந்தமான கடை, வீடு வாடகை வசூல் செய்வது, ஆக்கிரமிப்பை அகற்று வது, வரவு, செலவு பதிவேடுகளை பராம ரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. 

இதை தொடர்ந்து கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து கோயில்களில் உள்ள காலி பணியிடங்க ளின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவ ரங்களை அறிக்கையாக அனுப்பி வைக்க வும் கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், கோயில்களில் அங்கீரிக்கப் பட்ட பணியிடங்கள், காலியாக உள்ள பணியிட விவரம், 110 விதியின் கீழ் அனுமதி கோரியுள்ள பணியிடங்கள், மீதம் உள்ள காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யக்கூடியவை உள்ளிட்ட அனைத்து விவரங்களை அனுப்பவும் கோயில் அலு வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்நிலையில் அதிமுக ஆட்சிகாலத்தில் 10 விதியின் கீழ் அறிவித்த புதிய பணியிடங்க ளையும் சேர்த்து காலி பணியிடங்களை நிரப்ப ஆணையர் உத்தரவிட்டு இருப்பது ஊழியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது


ليست هناك تعليقات:

إرسال تعليق