நம்மைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

நம்மைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என்று உளவியல் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வலி யுறுத்தி இருக்கின்றன. 

அவற்றில் முக்கியமான ஐந்து விஷயங்கள் குறித்து இங்கே காணலாம். 

அடைய வேண்டிய லட்சியம் 

எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல் பவர்கள், எப்போதுமே எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற இயலாது என்று பெரியவர்கள் சொல் வார்கள். குறிப்பாக, ஒருவரது லட்சியத்தை ஒரு சிலரிடம் சொல்வது வெற்றிக்கான வழியல்ல என்பது வாழ்வியல் அனுபவம் பெற்றவர்கள் கருத்தாகும். நமது லட்சியம் யாரிடமும் வெளிப்படுத்தப்படாமல் இருக்கும்போது தான் அதை அடைவதற்கான மன உறுதி ஏற்படுகிறது என்று உளவியலாளர்கள் சொல்வதும் சிந்தனைக்குரியது. 

பொருளாதார நிலைமை 

ஒருவரது சம்பளத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போதைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அவர்களை சந்திக்கும் உறவினர்களின் முதல் கேள்வியே இரு வரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்' என்பதாக இருக்கும். இந்த விஷயத்தில் மவுனமாக இருந்து விடுவதே சிறந்தது. உண்மையை சொல்லும் நிலை யில், நல்ல விளைவுகள் ஏற்படுவதை விட, உறவுக்கு பாதகமான சூழலே ஏற்படக்கூடும். பணம் என்ற விஷயம் உறவினர்களையும், நண்பர்களையும் பகை வர்களாக மாற்றும் சக்தி பெற்றது என்பதை மனதில் கொள்வது நல்லது. 


தனிப்பட்ட விஷயங்கள் 

கணவன், மனைவி இருவருக்கிடையிலான உறவு, இரு நண்பர்களுக்கிடையிலான நட்பு, ஒருவருக்கு நடந்த சங்கடமான விஷயம், அலுவலக நட்பு ஆகிய விஷயங்களில் ஒருவர் மவுனமாகவும், அமைதியாக வும் இருப்பதே நல்லது. அதன் மூலம் பல எதிர்கால சங்கடங்கள் தவிர்க்கப்படும். சில விஷயங்களில் ஆலோசனை பெற விரும்பினால் அனுபவமும், அக்கறையும் உள்ள நெருக்கமான உறவுகள் அல்லது நண்பர்களை மட்டுமே அணுக வேண்டும். அலுவலகத்தில் அலுவலக பணிகள் பற்றி மட்டும் பேசுவது நல்லது. 

உடல் ஆரோக்கியம் 

உளவியல் அல்லது உடலியல் ரீதியாக ஒரு வருக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கிய குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவிப்பது அவசியமற்றது. அதன் காரணமாக, சுய மரியாதை பாதிக்கப்படக்கூடும் என்பதுடன், அனைவரும் பரிதாபமாக பார்க்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். மேலும், ஒரு சிலர் தற்காலிக மருத்துவ ஆலோசகர்களாக மாறி அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை கடைப்பிடிக்கச் சொல்லி வலியுறுத்துவார்கள். அதனால், தக்க மருத்துவரைத் தவிர எல்லோரிடமும் உடல் சார்ந்த குறைகளையோ அல்லது ஆரோக்கிய பாதிப்பு களையோ வெளிப்படுத்துவது கூடாது. 


செய்த தர்ம காரியங்கள் 

பண்பாட்டின் அடிப்படையில் ஒருவர் செய்த நல்ல காரியங்களை வெளியில் சொல்லக்கூடாது. வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற சொல்வழக்கு நம்முடைய தமிழ் மரபில் உண்டு. அந்த அளவுக்கு தர்ம காரியங்களில் ரக சியம் காக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற் கான மதிப்பு குறைவதுடன், எதிர்மறையான விமர் சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். .

No comments:

Post a Comment