தலைமைச் செயலக துறைச் செயலாளர்களுக்கான குறிப்பு
COVID-19 தொற்று மாநிலமெங்கும் அதி தீவிரமாக பரவி வரும்
வேளையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசிய
பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டும் செயல்படும் என
அரசாணை (நிலை)
எண்.386,
வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் துறை, நாள் 22.05.2021 அன்று ஆணையிடப்
பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசிய பணிகளை
மேற்கொள்ளும் துறைகளைப் பொறுத்தவரை, ஊரடங்கு காலம்
முடியும் வரை துறைச் செயலாளர்கள் அளவிலேயே, பின்வரும்
குறிப்புகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து, தகுந்த முடிவு
எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய
அனுமதிக்கப்படுதல் வேண்டும்.
(2) இணைநோய் உள்ள பணியாளர்கள் (Government servants with
Co-morbidities,| cancer patients,
etc.).
கர்ப்பிணி பெண்கள்,
பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து
முழு விலக்கு அளிக்கப்படுதல் வேண்டும்
(3) நோய்த் தொற்று தடுப்பதற்கான உரிய முறையான
வழிமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
வெ. இறையன்பு,
இ.ஆ.ப
அரசு தலைமைச் செயலாளர்
பெறுநர்
கூடுதல் தலைமைச் செயலாளர் முதன்மைச் செயலாளர்
செயலாளர், அனைத்துத் துறைகள்,
தலைமைச் செயலகம், சென்னை 9.
No comments:
Post a Comment