புதுச்சேரி கேர்' ஆண்ட்ராய்டு செயலி இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் அசத்தல் - EDUNTZ

Latest

Search here!

السبت، 29 مايو 2021

புதுச்சேரி கேர்' ஆண்ட்ராய்டு செயலி இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் அசத்தல்



புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள புதுச் சேரி பொறியியல் கல்லுா ரியில் இயங்கும் 'கூகுள் டிஎஸ்சி' எனப்படும் மாண வர் குழுவினர், 'புதுச்சேரி கேர்' (Pudhuvai care) என்ற ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளனர். ஆன்லைன் மூலமாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரியின் முதல்வர் விவேகானந்தன், 'புதுச்சேரி கேர்' செயலியை பொது மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். கல்லுாரியின் பதிவாளர் ஸ்ரீநாத், கம்ப்யூட்டர் பொறியியல் துறையின் தலைவர் மனோகரன், தக வல் தொழில்நுட்பத் துறை தலைவர் கோவிந்தசாமி, மாணவர் குழுவை வழி நடத்தும் பேராசிரியர் செல் வராஜ் உள்ளிட்டோரும், மாணவர்களும் கலந்து கொண்டனர். 

MOST READ 

செயலியை வடிவமைத்து ஒருங்கி ணைத்த மாணவர் ஆயுஷ் சிங் நன்றி கூறினார். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு சில நாட்களில் பதிவி றக்கம் செய்து பயன்படுத் தலாம். தற்போது இந்த செயலி கல்லுாரியின் http// www.pec.edu என்ற இணை யதளத்தில் இருந்து பதிவி றக்கம் செய்து பயன்படுத் தலாம். இது குறித்து, கல்லுாரி முதல்வர் விவேகானந்தன் கூறியதாவது: எங்கள் கல்லுாரி மாணவர்கள் உருவாக்கிய 'புதுவை கேர்' செயலியை பயன்படுத்தி புதுச்சேரியில் உள்ள கொரோனா கேர் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக் கைகள் குறித்த விபரங் களை தெரிந்து கொள்ள லாம். 

MOST READ 

மருத்துவ மனைகளின் இருப்பிடம், டெலிபோன் எண்களும் தொகுத்து  வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன் படுத்தி கோவிட் விதி மீறல்கள் பற்றிய விபரங் களை, போலீஸ் துறைக்கு உடனுக்குடன் புகார் அளிக்கலாம். கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமை யில் இருப்பவர்கள் மன உளைச்சல் ஏற்பட்டால் புதுச்சேரி அரசால் நியமிக் கப்பட்டுள்ள 38 உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பேசலாம். 

மேலும், மத்திய அர சின் கோவின் இணையத ளத்தில் இருந்து விபரங் களை பெற்று பயனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவதற்கும் 'புதுச்சேரி கேர்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பயன் படுத்தும் வகையில் செய லியை மாணவர் குழுவி னர் வடிவமைத்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறி னார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق