கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை கண்காணிக்க புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது.
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு 'ஆன்லைன்' மூலம் படிக்கின்றனர்.
MOST READ
நேரடியாக வகுப்புகளுக்கு செல்லாததால் இவர்களது கல்வித் திறன் குறைகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.* வீட்டில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். தேவைப்பட்டால் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்கலாம்.*
MOST READ
தேர்வு, மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும். பாடங்களை படிக்கும் விதம், கூட்டாக செயல்படும் முறை, திறமையை எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம்.
ஆன்லைன் கல்வியில் ஆர்வம் ஏற்படுத்த டிஜிட்டல் கருவிகள், சிறிய வீடியோக்கள் மூலம் பாடம் நடத்துவது அவசியம். மாநில அரசின் பாடத்திட்டபடி 1-8ம் வகுப்பு மாணவருக்கு வினாடி-வினா, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரை எழுதுதல் போன்றவை மூலம் கற்பிக்கலாம். இவர்களுக்கான வீடியோ நேரம் 5-7 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
MOST READ
9-12ம் வகுப்பு மாணவருக்கு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி கற்பித்தல் பயனுள்ளதாக இருக்கும். இவர்களுக்கான வீடியோ நேரம் 15-20 நிமிடங்கள் இருக்கலாம்.
* ஆன்லைன் வகுப்புகளை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் மாணவர் படிப்பதற்கான திட்டங்களை வகுக்கு வேண்டும். டிஜிட்டல் கருவி மூலம் பாடம் தொடர்பான வீடியோக்களை அனுப்பி, மாணவர்களை கற்கும்படி செய்தல் அவசியம். அடுத்த கல்வியாண்டிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து தயார்படுத்த வேண்டும்.*
வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு கல்வி நிறுவனங்களில் உள்ள நுாலகங்களில் இருந்து புத்தகங்களை வீடுதோறும் கொடுக்கலாம்.* பேரிடர் காலங்களில் வகுப்பறைக்கு வெளியே மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
கிராமப்புற மாணவர்களுக்கு டிஜிட்டல் கருவி, விரைவான இன்டர்நெட் வசதி கிடைப்பதில்லை. இங்கு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நேரில் சென்று கல்வி கற்பிக்கலாம்.* மாநிலங்கள் ஆய்வு மையத்தை உருவாக்கி, வீட்டில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடப்புத்தங்கள் கிடைத்ததா, இடைநிறுத்த விகிதம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment