அண்ணா பல்கலைக்கழக எம்.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை நீட்டிக்க கோரி வழக்கு - EDUNTZ

Latest

Search here!

Thursday 27 May 2021

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை நீட்டிக்க கோரி வழக்கு


எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை நீட்டிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி ஆகிய இரு படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் மாணவர் சேர்க்கையின்போது தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது எனவும், மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டையே பின்பற்றவேண்டும் எனவும் மத்திய அரசு வற்புறுத்தியது. இதனால், 2020-21-ம் கல்வியாண்டில் இந்த இரு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மாணவர்கள் வழக்கு இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 45 இடங்களைக்கொண்ட இந்த இரு படிப்புகளிலும் வெறும் 12 பேருக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறி, குழலி என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அனுமதி நீட்டிப்பு அவரது மனுவில் கூறியிருப்பதாவது:- 33 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை வெளியிடவில்லை. இந்தப் பட்டியலை வெளியிடக் கோரி நான் அனுப்பிய மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, மார்ச் 20-ந் தேதி வரை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. 

காலம் கடந்துவிட்டதால் பட்டியலை வெளியிட முடியாது. அதேநேரம், இந்த அனுமதியை நீட்டிக்கக் கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை கடிதம் அனுப்பவேண்டும். அதன்படி அனுமதி கிடைத்தால் மட்டுமே, மாணவர் சேர்க்கை பட்டியலை வெளியிட முடியும் என்று கூறியுள்ளது. காலி இடங்கள் அதையடுத்து அனுமதியை நீட்டிக்க கோரும்படி அண்ணா பல்கலைக்கழகத்திடம் முறையிட்டும் பயன் இல்லை. 

எனவே, அனுமதியை நீட்டிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும், அதன்படி காலியாக உள்ள 33 இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பதில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவுக்கு வருகிற ஜூன் 1-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment