மதுரை ரயில்வே மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''மதுரை ரயில்வே மருத்துவமனை கரோனா நோய் சிகிச்சைப் பிரிவுக்கு 15 மருத்துவர்கள், 28 மருத்துவ உதவியாளர்கள், 12 சுகாதாரப் பணியாளர்கள், 2 மருத்துவப் பரிசோதனை மைய தொழில்நுட்ப அலுவலர்கள், 2 ரேடியோகிராபிகள், 2 மருந்தாளுநர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நவம்பர் 3 வரை அல்லது தேவைப்படும் காலம் வரை நீட்டிப்பு செய்யப்படலாம்.
MUST READ முதுகலை பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
விண்ணப்பதாரர்களுக்குத் தொலைபேசி வாயிலாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசித் தேதி மே 10, 2021. அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும் தேவைக்கு ஏற்பப் பரிசீலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 80561-62611, 80561-62613 என்ற அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.''.
இவ்வாறு ரயில்வே மருத்துவ நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment