வறுமை நிலைக்குப் பயந்து விடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற பட்டுக்
கோட்டையாரின் பாடலுக்கேற்ப வறுமையை வென்று
திறமையை வெளிப்படுத்தும் மாணவியாக யாஷினி
யைக் கூறலாம்.
பள்ளிப்படிப்பின்போது சிலம்பத்தில்
பல போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் பரிசுகள்
பெற்றதுடன், சிலம்பத்தைப் பலருக்கும் கற்றுக்
கொடுத்து வரும் குருவாகவும் உயர்ந்திருக்கிறார்.
இனி அவருடன் பேசுவோம்.
உங்களைப் பற்றிய அறிமுகம்? சிலம்பம் கற்றுக்
கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது?
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் எனது ஊர்.
நான் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்
கிறேன். அப்பா சீனிவாசன் ஆட்டோ டிரைவர்,
அம்மா மகேஸ்வரி, தங்கை ரோஷிணி 7-ம் வகுப்பு
படிக்கிறாள். சிலர் சிலம்பம் சுற்றும் போது நான்
வேடிக்கை பார்த்திருக்கிறேன். அப்போது அதில்
ஆர்வம் அதிகமானது. என் ஆர்வத்தைப் புரிந்து
கொண்ட அப்பா பயிற்சியில் சேர்த்துவிட்டார்.
எனது குரு டைகர் ஜாபர். அவர் வில்லிவாக்கத்தில்
வசிக்கிறார்.
அவரிடம் பயிற்சி பெறுவதற்காக
தினமும் மாலை அப்பா மாதவரத்திலிருந்து
வில்லிவாக்கம் அழைத்துப் போவார்.
அதில் நிறைய பயிற்சிகள் எடுத்துக்
கொண்டேன். சிலம்பத்தில் இன்னும்
நிறைய பாடங்கள்
இருக்கின்றன.
தொடர்ந்து அவற்றை கற்றுக்
கொண்டு
வருகிறேன். சிலம்பம்
என்பது கம்புகளை வைத்து மட்டும்
செய்யக்கூடிய பயிற்சி கிடையாது,
கத்தி, வேல்கம்பு, சுருள்வாள், மான்
கொம்பு, செடிகுச்சி போன்றவற்றை
யும் வைத்து செய்வது. இதில் கத்தி
சண்டை,
இரட்டைக் கம்பு,
அலங்காரச்சிலம்பம், போர்ச்சிலம்
பம் இப்படி எண்ணற்ற வகைகள்
உள்ளன. ஒவ்வொன்றிலும் பல்
வேறு படிகளும் நுணுக்கங்
களும் உள்ளன.
இதில் உங்கள் பெற்றோரு
டைய பங்கு என்ன ?
சிலம்பம் கற்றுக் கொள்ள
தொடங்கியபோது சொந்தபந்தங்கள் நிறைய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்
கள்.
எனது பாட்டி தாத்தாவே பெண் பிள்ளையை
இந்த மாதிரி விளையாட்டுகளையெல்லாம் ஆட்
விட்டு வேடிக்கை பார்க்கலாமா? என்று எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அப்பா அதையெல்
லாம் காதில் வாங்கவில்லை.
என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு என்னை
ஊக்கமூட்டுவதற்கு அப்பா தவறியதே இல்லை.
பயிற்சிகள் தந்த நம்பிக்கையில் நிறைய போட்டி
களில் பங்குபெற்றுள்ளேன். எல்லா இடங்களுக்கும்
அவரே அழைத்துச் செல்வார்.
சமீபத்தில் டெல்லி
யில் நடைபெற்ற போட்டிக்காகச் சென்ற போதும்
அப்பாவும் உடன் வந்திருந்தார். எங்கேயுமே
என்னைத் தனியாக விட்டதில்லை.
நீங்கள் அளித்து வரும் சிலம்பாட்ட பயிற்சி
பற்றி...
டைகர் ஜாபர்தான் என்னுடைய முதல் குரு. அவரி
டம் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். அதன்
பிறகு ஞானம் மாஸ்டரிடம் கொஞ்ச காலம் பயிற்சி
யெடுத்தேன். அவர் நிறைய வகைகளில் சிலம்பம்
கற்றுக்கொடுத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்
நாடு சிலம்பாட்டம் கிளப்பில் ஒரு அமைப்பை ஏற்
படுத்தினோம். அப்போதிருந்த செயலாளர் முருகக்
கனி மாஸ்டர் சர்வதேச அளவில் போட்டிகளில்
கலந்து கொள்வதற்கான நம்பிக்கையும் ஊக்க
அளித்தார்.
இப்போது மாதவரத்தில்
உள்ள பூங்காவில் மாணவர்களுக்கு சிலம்பு
பயிற்சி அளிக்கின்றேன்.
சமீபத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக்
கழகத்தில் எங்கள் அமைப்பின் சார்பாக
10 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதில் 2 பேர் தங்கப்பதக்கமும், 3 பேர்
வெள்ளிப்பதக்கமும், 5 பேர் வேறு சில
பதக்கங்களும் பெற்றனர். அது எனக்கு
மிகவும் பெருமையாக இருந்தது. எங்களிடம்
பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஊக்கமும்,
தன்னம்பிக்கையும் தந்து பயிற்சி
கொடுத்து வருகிறேன்.
கற்றுக்கொள்ளும் போதும் போட்டி
களின் போதும் நீங்கள் சந்தித்த
சவால்கள் என்னென
No comments:
Post a Comment