சீலிங் Fan -ஐ சுத்தம் செய்வதற்கான ஈசியான டிப்ஸ்!!! படிக்க மறக்காதிங்க!!! - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

சீலிங் Fan -ஐ சுத்தம் செய்வதற்கான ஈசியான டிப்ஸ்!!! படிக்க மறக்காதிங்க!!!

வீட்டை நாள்தோறும் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே சில குப்பைகள் அல்லது தூசுகள் இருந்து கொண்டே இருக்கும். இன்னொருபுறம் சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த பொருட்களில் குப்பைகள் படிந்து, நாள்தோறும் பறந்து கொண்டு இருக்கும்.அப்படியான பொருட்களில் ஒன்று வீட்டில் இருக்கும் சீலிங் பேன். 


அதனை நாள்தோறும் சுத்தம் செய்ய மாட்டோம் அல்லது செய்ய இயலாது. விஷேச நாட்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் பொருள் என்பதால், அதில் தூசுகள் நிறைந்திருக்கும். உடனடியாக நீக்குவதற்கும் கடினமாக இருக்கும். இந்த சிரமத்தை எதிர்கொள்பவர்களுள் ஒருவராக நீங்களும் இருந்தால், அதனை ஈஸியாக சுத்தம் செய்வதற்கான டிப்ஸை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். கோடைக் காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா?
தலையணை உறை : சீலிங் பேனை தூசுகள் பறக்காமல் அல்லது முகத்தின் மீது விழாமல் சுத்தம் செய்ய ஏதுவான ஒன்று தலையணை உறைகள். நீங்கள் சீலிங் பேனை சுத்தம் செய்ய முடிவெடுத்த பிறகு, வீட்டில் இருக்கும் பழைய தலையணை உறையை எடுத்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் முகத்தில் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பின்னர், சீலிங் பேனின் இறக்கைகளை தலையணை உறையால் கவர் செய்து கொள்ளுங்கள். இறுக்கமாக அந்த உறையை இறக்கையை சுத்தம் செய்யுமாறு பிடித்துக்கொண்டு மெதுவாக உறையை வெளியே இழுங்கள். தற்போது சீலிங் பேனின் இறக்கைகள் மீது இருக்கும் தூசிகள் தலையணை உறைக்குள் இருக்கும். சீலிங் பேனும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்.வேக்யூம் கிளீனர் (Vacuum Cleaner) : ஏதாவதொரு சந்தர்பத்தில் வேகம்யூம் கிளீனரை கண்டுபிடித்தவருக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இதன் மூலம் நம் கிளீன்ங் வேலை மிகவும் சுலப்படுத்தப்பட்டிருக்கிறது. வேக்யூம் கிளீனரைக் கொண்டு உங்களுடைய சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். மிகப்பெரிய குச்சியில் வேக்யூம் கிளீனரை இணையுங்கள். மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
முகத்தை நன்றாக மூடிக்கொண்ட பிறகு, வேக்மயூம் கிளீனரை பயன்படுத்தி சீலிங் பேனை சுத்தம் செய்யுங்கள். பேன் இறக்கைகள் மீது இருக்கும் தூசுகள் காணாமல் போய் இருக்கும்.சாக்ஸ் ( Socks) : உங்களிடம் பழைய சாக்ஸ்கள் இருந்தால் அதனை தூக்கி எறிந்துவிட வேண்டாம். கிளீனிங் வேலை நடைபெறும் நாட்களில் சீலிங் பேன்களை சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும். முதலில் பழைய சாக்ஸ் ஒன்றை எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் நனைத்த பிறகு சாக்ஸை சீலிங் பேனின் இறக்கை மீது வையுங்கள். சாக்ஸின் இரண்டு முனைகளையும், தங்களது இரு கைகளால் பிடித்துக்கொண்டு மெதுவாக தூசியை சுத்தப்படுத்துங்கள். சீக்கிரம் சீலிங் பேன் சுத்தமாகும்.காப்வெப் பிரஷ் (Cobweb Brush) : காப் வெப் பிரஷ் அல்லது ஸ்பைடர் பிரஷ் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். இந்த பிரஷ் இருந்தால் சீலிங் பேனை ஈஸியாக சுத்தம் செய்துவிடலாம். ஏனென்றால், சிலந்தி வலையைப் போல் இந்த பிரஷ்ஷின் அமைப்பு ரவுண்டாக விரிதிருக்கும் என்பதால், ஒட்டடை மற்றும் தூசுகளை சுத்தம் செய்வதற்கு எளிமையாக இருக்கும். நீளமான குச்சி ஒன்றின் முனையில் இந்த பிரஷ்ஷைக் கட்டிவிடுங்கள். மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை துணியால் மூடிக்கொண்ட பிறகு, அந்தக் குச்சியை கொண்டு சீலிங் பேனின் இறக்கைகளை சுத்தம் செய்யுங்கள்.இதுநாள் வரை சீலிங் பேனை சுத்தம் செய்ய கஷ்டப்பட்டு கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

No comments:

Post a Comment