கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) - அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும்
நிவாரண நடவடிக்கைகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின்
ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பல்வேறு பணியாளர்
சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஆணைகள்
வெளியிடப்படுகின்றன.
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை
அரசாணை (நிலை) எண். 52
நாள்: 27.05.2021
பிலவ வருடம், வைகாசி-13
திருவள்ளுவர் ஆண்டு -2052
ஆணை :
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) பரவலின் இரண்டாவது அலையை
கட்டுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை
மேற்கொள்வதற்கும், போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு
வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது 11.05.2021 நாளிட்ட செய்தி வெளியீட்டில்,
இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய
தேவை உள்ளது என்றும், அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு
பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம் எனவும்
குறிப்பிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்க வேண்டும்
என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
2. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுப் பணியாளர் சங்கங்கள் அளித்த கடிதங்களில்,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின்
நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும்
ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு
வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment