மதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்' - EDUNTZ

Latest

Search here!

السبت، 29 مايو 2021

மதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்'


மதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்' :மதிய உணவு திட்டத்தின்கீழ் சமைக்கப்படும் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களின் வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

MOST READ 

பள்ளிகள் இயங்காததால், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் ஏழை, எளிய மாணவர்கள், உண்ண உணவின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

MOST READ 

இந்நிலையில், அவர்களின் நலனை கருத்தில் வைத்து, மதிய உணவு திட்டத்தின்கீழ் சமைக்கப்படும் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், 60:40 என்ற விகிதத்தில், சமையல் செலவை, மத்திய - மாநில அரசுகள் பங்கிட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரை பொறுத்தவரை, 90:10 என்ற விகிதத்தில், செலவை பகிர்ந்து வருகின்றன. 

MOST READ 

இந்நிலையில், இந்த சமையல் செலவுக்கான மத்திய அரசின் பங்கை, மாணவர்களின் வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 11.8 கோடி பேர் வரை, இதனால் பயனடைவர் எனக் கூறப்படுகிறது. இதற்காக, 1,200 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق