மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) மாணவர் சேர்க்கை 2021 - 22க்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையர் வெளியீடு. - EDUNTZ

Latest

Search here!

Tuesday 8 June 2021

மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) மாணவர் சேர்க்கை 2021 - 22க்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையர் வெளியீடு.



தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6. 

ந.க.எண்: 34462/பிடி1/இ1/2021, நாள்:07.06.2021. 

பொருள்:- 

பள்ளிக்கல்வி-2021-2022ஆம் கல்வியாண்டிற்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை-சார்பு 

பார்வை:- 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.W.P.No.7299 of 2021- மீதான தீர்ப்பு நாள்.22.03.2021 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. 

1. பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். 

3. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட்-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம். 

4. மிக அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். 

5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம். 

6 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள . மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம். 

மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

                                     பள்ளிக்கல்வி ஆணையர் 






No comments:

Post a Comment