மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கொரோனா வைரஸ் (Covid-19) நோய்த்தொற்றை
தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு -14.06.2021 காலை
6.00 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப்
பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை
13.06.2021 வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-3.1)த் துறை
அரசாணை (வாலாயம்) எண்: 86
நாள் 07.06.2021
பிலவ, வைகாசி 24,
திருவள்ளுவர் ஆண்டு,2052.
படிக்கப்பட்டது:
1. அரசாணை (வாலாயம்) எண்.84, மாற்றுத்திறனாளிகள் நல
(மாதிந-3.1)த் துறை, நாள் 31.05.2021
2. அரசாணை (நிலை) எண்.394, வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மை (பே.மே.IV)த் துறை, நாள் 05.06.2021
3. மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் ந.க.எண்.3/நிர்-2/
2020,நாள் 07.06.2021
***
ஆணை:-
மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் கொரோனா பெருந்தொற்று
காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக்
கருத்தில்கொண்டு 06.06.2021 வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள்
அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக
விலக்களித்து
ஆணையிட்டுள்ளது.
அரசு
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மாநிலம் முழுவதும்
கொரோனா பெருந்தொற்றினை (Covid-19) கட்டுப்படுத்தும் நோக்கில் முழு
ஊரடங்கானது 14.06.2021
6.00
மணி
வரை
நீட்டித்து
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்,
இவ்வரசாணையில் ஏனைய
காலை
(த.பி.பா..)
2
கட்டுப்பாடுகளுடன், அரசு அலுவலகங்கள் 30% அரசு ஊழியர்களுடன் செயல்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின்
கடிதத்தில் 07.06.2021 முதல் 13.06.2021 வரை மாற்றுத் திறனாளி அரசுப்
பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு மேற்படி ஊரடங்கு காலகட்டத்தில்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அரசுப்
பணியாளர்கள் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அரசுப்
பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து ஆணை
வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
4.
06.06.2021
வரை
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை கவனமாக
பரிசீலித்த பின்னர் அரசானது, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு ஏற்கனவே
அலுவலகத்திற்கு வருவதிலிருந்து
முழுவதுமாக
விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து 13.06.2021 வரை மாற்றுத்திறனாளி
அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து
ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
வெ.இறையன்பு
அரசு தலைமைச் செயலாளர்
பெறுநர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சென்னை-9.
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, சென்னை-9.
அனைத்துத் துறைகள், தலைமைச் செயலகம், சென்னை-9.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், சென்னை-5.
அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் /அனைத்து துறைத் தலைவர்கள்
(மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வாயிலாக)
நகல்:-
அரசு செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச்செயலாளர்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சென்னை-9.
No comments:
Post a Comment