"ஸ்பைசஸ்" நிறுவனத்தில் வாய்ப்பு கடைசி நாள்: 18.6.2021 - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 June 2021

"ஸ்பைசஸ்" நிறுவனத்தில் வாய்ப்பு கடைசி நாள்: 18.6.2021

"ஸ்பைசஸ்" நிறுவனத்தில் வாய்ப்பு


‘ஸ்பைசஸ்' நிறுவனத்தில் வாய்ப்பு மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: வேதியியல் 4, மைக்ரோபயாலஜி 2 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை படிப்பில் வேதியியல் / மைக்ரோ பயாலஜி முடித்திருக்க வேண்டும். வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணியிடம்: மும்பை 2, சென்னை 2, கோல்கட்டா 1 மற்றும் ரேபரேலியில் 1 இடம் உள்ளது. 

பணி அனுபவம்: ஏதாவது உணவு தர சோதனை ஆய்வகத்தில் குறைந்தது இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, அனுபவம். ஊதியம்: மாதம் ரூ.30 ஆயிரம்.


 விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அந்தந்த அலுவலக இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சென்னைக்கு விண்ணப்பிப்பவர்கள் sbchennairecruitment@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள்: 18.6.2021 விபரங்களுக்கு: http://indianspices.com/sites/default/files/Appd%20detailed%20advertisement.pdf

No comments:

Post a Comment