2009க்கு முன்பு எம்பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க TRB யில் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 9 June 2021

2009க்கு முன்பு எம்பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க TRB யில் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 104 அரசுக் கல்லூரிகளில் உள்ள 5000 காலிப் பேராசிரியர் பணியிடங்களில் 2331ஐ நிரப்ப, 2019ல், TRB மூலம், அப்போதைய தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. 


 இதில்,(U G.C மறு வரைவு 2016 மற்றும் 2018ன் படி,) 2009ற்கு முன் எம்.பில் முடித்தவர்களுக்கு, பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியான செட்/நெட்/பி.ஹெச்.டி பட்டம் பெறுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதை கவனத்தில் கொள்ளவில்லை. அதே போல், கௌரவ விரிவுரையாளர் பணி நிரந்தரம் செய்வதிலும் விண்ணப்பிக்க 2009 ற்கு முன் எம்.பில் முடித்த கௌரவ விரிவுரையாளர்களை அனுமதிக்கவில்லை. 

 இதை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதி மன்றம், வழக்கை விசாரித்து, இந்த இரு அறிவிப்பிற்கும், இடைக்கால தடை வழங்கி, வழக்கை 21.06.2021ற்கு, ஒத்தி வைத்தது. இதை, புதிதாக ஆட்சியமைத்துள்ள தி.மு.க அரசு, பரிசீலித்து, 2009 ற்கு முன் எம்.பில் முடித்தவர்களையும் காலிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். 

அதுமட்டுமில்லாமல், நேற்றைய தினம், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தமிழக அரசின் உயர்கல்வி துறை, தற்போது, பணி புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களின் விபரங்களை கேட்டுள்ளது. இதில் சென்ற ஆட்சியில் செய்தது போலவே, 2009 ற்கு முன் எம்.பில் முடித்து பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களின் விபரங்கள் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, தமிழ் நாடு அரசுக் கல்லூரி 2009 ற்கு முன் எம்.பில் முடித்த கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், 2019ல் TRB மூலம் வெளியிடப்பட்ட அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும் மற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தம் (பணி வரன்முறை) செய்யும் சிறப்பு TRB அறிவிப்பிலும், 2009 ற்கு முன் எம்.பில் முடித்தவர்களையும் விண்ணப்பிக்க, அனுமதிக்கும் வண்ணம், மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். 

இதை நடைமுறைப்படுத்தும் போது, தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான 2009 ற்கு முன் எம்.பில் முடித்த பட்டதாரிகள் பயனடைவார்கள். உயர்கல்வித் துறையில், பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை அனைத்து பணி நிரந்தர நடவடிக்கைகளையும் கவனத்துடன் செயல்படுத்தும் தமிழக அரசு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலுடனும் மற்றும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் திறம் மிக்க செயல்பாட்டின் மூலமும், செயல்படும் தமிழக உயர் கல்வித்துறை, U.G.C அனுமதித்த மற்றும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் போன்றவை உறுதிப்படுத்திய, 2009 ற்கு முன் எம்.பில் கல்வித்தகுதியையும் அங்கீகரித்து, காலிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment