அரசாணை (நிலை) எண்.21 - நாள் 03.06.2021 - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து தமிழக அரசு ஆணை - EDUNTZ

Latest

Search here!

Thursday 3 June 2021

அரசாணை (நிலை) எண்.21 - நாள் 03.06.2021 - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து தமிழக அரசு ஆணை

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - மூன்றாம் பாலினர் நலன் - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணைகள் - வெளியிடப்படுகிறது. 


சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.3(10] துறை அரசாணை (நிலை) எண்.21 நாள் 03.06.2021 பிலவ, வைகாசி 20, திருவள்ளுவர் ஆண்டு 2052. படிக்கப்பட்டவை: 1. 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் அறிக்கை 2. அரசாணை (நிலை) எண்.19 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.3(1) துறை நாள் 07.05.2021 3. சமூக நல ஆணையரின் கடித ந.க. எண். 12745/ம.ந.1(3)/2021, நாள் 10.05.2021 ஆணை: 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையில், 'தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் (நகரப்பேருந்து (Town bus)] மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 2. மேலே பார்வை 2ல் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board), பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்தும் இதன்மூலம் ஆண்டொன்றிற்கு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ.1,200 கோடி இழப்பினை அரசு மானியமாக வழங்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட சமூக நல ஆணையரது கருத்துருவில், 15.04.2008ம் நாளிட்ட இத்துறையின் அரசாணை (நிலை) எண்.38ன்படி தமிழ்நாட்டில் உள்ள மூன்றாம் பாலினருக்கு சமூக பாதுகாப்பை அளிக்கவும், முழுமையான சமூக அங்கீகாரத்தை அளிக்கவும், தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும் இம்மூன்றாம் பாலினர் நல வாரியம் மூலம் மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இதுநாள்வரை 11,449 மூன்றாம் பாலினர்கள் கண்டறியப்பட்டு 6,248 மூன்றாம் பாலினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கோவிட்-19 நிவாரண தொகை, 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள மூன்றாம் பாலினருக்கு ரூ.1000/-வீதம் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதுடன் இவ்வாரியத்தின் வாயிலாக மூன்றாம் பாலினர் சொந்தமாக தொழில் செய்வதற்காக ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களது நலனில் தனி அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும்குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சமூக நல ஆணையர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் (white board) பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது போன்று, மூன்றாம் பாலினரும் தங்களது சமூக பொருளாதார தேவைகளுக்கென வெளியில் செல்லும் போது அவர்களது பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்திடும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரையும் அனைத்து அரசு போக்குவரத்து கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் (white board) பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணைகள் வழங்குமாறு சமூக நல ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

4. சமூக நல ஆணையரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த பின்னர், மூன்றாம் பாலினரும் தங்களது சமூக பொருளாதார தேவைகளுக்கென வெளியில் செல்லும் போது அவர்களது பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board), சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் பதியப்பெற்று வழங்கப்படும் அடையாள அட்டையுடன் பயணம் மேற்கொள்ளும் மூன்றாம் பாலினர் அனைவரும் கட்டணமில்லா பயண சீட்டுடன் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. 

5.இவ்வாணை நிதித்துறையின் இசைவுடன் அதன் அ.சா.எண்.23107/நிதி(ச.ந)/2021, நாள்31.05.2021-ன்படி வெளியிடப்படுகிறது






No comments:

Post a Comment