தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா?. இன்று முடிவு - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 2 يونيو 2021

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா?. இன்று முடிவு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா?. இன்று முடிவு 


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக அரசு புதன்கிழமை முடிவெடுக்கப்புள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கரோனா பரவலால் மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் போக்கு எண்ணிக்கை காரண மாக மே 3-ஆம் தேதி நடைபெறவிருந்த மொழிப்பாடம் மே 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 


இதையடுத்து தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப் 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து முதல் வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோச னைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 'சிபிஎஸ்இ பொதுத்தேர்வை பொருத்தே தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு தனது முடிவை அறிவித்து விட்டதால் தமிழக அரசும் பிளஸ் 2 பொதுத்தேர்வு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை புதன்கிழமை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق