பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்தார்.
பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ், சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். கட்சிகள், பெற்றோர், மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார். அறிக்கையை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. SOURCE NEWS
No comments:
Post a Comment