ஆலன் கரீர் ஃபவுண்டேஷன் சார்பில் ஆன்லைன் மூலம் - 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பயிற்சி வகுப்புகள் : - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

ஆலன் கரீர் ஃபவுண்டேஷன் சார்பில் ஆன்லைன் மூலம் - 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பயிற்சி வகுப்புகள் :



ஆலன் கரீர் ஃபவுண்டேஷனில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. 

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 


தற்போதைய கரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் தடையில்லாமல் வீட்டிலிருந்தே படிப்பை தொடரும் வகையில் ஆலன் பிரீ-நர்சர் மற்றும் கரீர் ஃபவுண்டேஷன் சார்பில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய திறன் தேடல் வகுப்பு, பல்வேறு மாநில கல்வி வாரியம், ஒலிம்பியாட் மாணவர்களும் இதில் சேர முடியும். ஆலன் கல்வி மைய தலைவர் அமித் குப்தா இதுகுறித்து கூறும்போது, “6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்குகின்றன. 

இந்த வகுப்புகள் 2022 மார்ச் வரை நடைபெறும். ஆங்கிலம், இருமொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். இதில் பாடங்கள் வாரியாக வீடியோ விரிவுரைகள், படிக்க தேவையான பாடங்கள், பயிற்சி தாள்கள் கிடைக்கும். வழக்கமான மதிப்பீடுகளும் உண்டு. மாணவர்கள் `ஆலன் பிளஸ்' செயலி மூலமும் இணையதளம் மூலமும் கல்வி கற்க முடியும். வழக்கமான ஆன்லைன் பாடம் போல் இல்லாமல் வகுப்பறைகளில் பாடங்களை கற்பது போன்ற மெய்நிகர் முறையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடத்திட்டத்தின்படி பாடங்கள் போதிக்கப்படும். 

மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை இணையம்/செயலி மூலமே கேட்க முடியும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் அந்த சந்தேகங்களை தீர்த்துவைப்பர். மாணவர்களின் கல்வி நிலை குறித்து அவ்வப்போது ஆராய்ந்து அதற்கு ஏற்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அவ்வப்போது சிறுசிறு தேர்வுகள் வைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment