90 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீர், மேகம் கொண்ட புதிய கிரகம்..! - EDUNTZ

Latest

Search here!

Saturday, 12 June 2021

90 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீர், மேகம் கொண்ட புதிய கிரகம்..!

தென் கலிஃபோர்னியா: அண்டத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வரும் நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் 'டிஓஐ 1231 பி' என்கிற புதிய கிரகத்தை கண்டுபிடித்தது. இந்த கிரகம் பூமியைக் காட்டிலும் மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. 


நெப்டியூன் கிரகத்தின் மறு உருவம் என்றும் கூறியுள்ளது இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் பூமியைப் போலவே இந்த கிரகத்தில் தண்ணீர் மற்றும் மேகங்கள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரெட் டுவார்ஃப் எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது இந்த கிரகம். சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்துக்கு சூரியனைவிட வயது அதிகம். சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதியே குளுமையானது என்பதால் இந்த புதிய கிரகமும் குளுமை நிறைந்தது. இந்த கிரகத்தின் தட்பவெட்பம் அறிய பார்கோட் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கிரகத்தில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்கிபோல சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கிரகத்தை காண முடியும். தென் கலிபோர்னியா மாகாணத்தில் நாசா விஞ்ஞானி டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் டிஓஐ 1231 பி கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து முன்னதாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment