கிராமப்புற மாணவர்களுக்கு ‘ஆன்லைன் டிஜிட்டல்' முறையில் கல்வி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு 
╰•★★ PLEASE CLICK HERE FOR MORE NEWS ★★•╯ 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர், செல்போன் வசதிகளை பெற முடியாது. 

அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக வேலைக்கு செல்வதாகவும், அதைத் தடுக்க கிராமப்புறங்களில் ஒவ்வொரு தெருவிலும் மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக ஆன்லைன் டிஜிட்டல் ஏற்பாடுகளை மேற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நியமித்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும். 

 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!