நகம் கடிப்பது நன்மையா ? தீமையா? - EDUNTZ

Latest

Search here!

Monday, 7 June 2021

நகம் கடிப்பது நன்மையா ? தீமையா?



தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. 


மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.

No comments:

Post a Comment